தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான தூய்மைக் கணக்கெடுப்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி மாநில அளவில் 6-ம் இடம் பிடித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்ட விருது அறிவிக்கப்பட்டுவருகிறது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ராசிபுரம் நகராட்சி மாநில அளவில் 6-ம் இடம் பிடித்துள்ளது.