திணை அரிசி குழந்தைகளின் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் இந்த அரிசியில் இருக்கிறது. கேரட் சாப்பிடுவது எப்படி கண்களுக்கு நன்மை தருகிறதோ, அதுபோல திணை அரிசியும் கண்களுக்கு நல்லது. திணை அரிசி பொங்கல், திணை அரிசி பாயாசம், திணை அரிசியை வைத்து கொழுக்கட்டை போன்றவற்றை செய்து சாப்பிடலாம். இந்த அரிசியை தொடர்ந்து உண்டு வந்தால், சர்க்கரை, நீரிழிவு போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.