ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் ஈரா.மகேந்திரன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து அவர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "15 ஆண்டுகளாக உங்களை உயிராக நேசித்து, உண்மையும் நேர்மையுமாக, கட்சிக்காக உழைத்து வந்த போதும், எனக்கு கிடைத்தது என்னவோ, அவமானமும் புறக்கணிப்பும் மட்டுமே. எதை இழந்தாலும் சுயமரியாதையை இழக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.