மோடி பிரதமராக பதவியேற்பு ராசிபுரத்தில் கொண்டாட்டம்

51பார்த்தது
மோடி பிரதமராக பதவியேற்பு ராசிபுரத்தில் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில், நாட்டின் 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடிக்கு, வாழ்த்து தெரிவித்து, பாஜகவினர், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி பதவி ஏற்பு விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக சார்பில் 3வது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். இதனை முன்னிட்டு பாஜகவினர் பதவியேற்பு விழாவை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி, 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜகவின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே, இராசிபுரம் நகரத் தலைவர் பி. வேல்முருகன், தலைமையில் பாரதமாதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டு, பதவி ஏற்பு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி