அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

85பார்த்தது
அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் கோயில், வேலூா் மாரியம்மன் கோயில், பேட்டை புதுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பரமத்தி வட்டாரத்தில் பகவதி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நன்செய் இடையாற்று மாரியம்மன் கோயில், பாண்டமங்கலம் மாரியம்மன் கோயில், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூா் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூா் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூா் மாரியம்மன், பரமத்தி அங்காளபரமேஸ்வரி, வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி