வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு

85பார்த்தது
நாமக்கல் உழவர் சந்தையில் வேளாண்மை துறையின் மூலம் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கலாஜாதா என்னும் கிராமிய கலை நிகழ்ச்சியின் வாயிலாக வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், உழவர் சந்தையின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாடகம் மூலமாகவும், நாடகம் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும், நகைச்சுவையின் மூலமாகவும், கலந்துரையாடல் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கவிஷங்கர், ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி