முறையாக குடிநீர் விநியோகம் செய்ய கோரிக்கை

1897பார்த்தது
குமாரபாளையம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பில் புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் நீரேற்று நிலையம் அமைத்து, சுத்திகரிப்பு செய்து, குமாரபாளையம்,  தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம், படைவீடு, பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகள், திருச்செங்கோடு,   உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து தற்போது குடிநீர் மேற்கண்ட பகுதிகளில் விநியோகம்  வந்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டால், நெடுஞ்சாலை பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  அதனை நெடுஞ்சாலைத்துறையினர் தான் சரி செய்ய வேண்டும் என கூறி வருகிறார்கள். வழக்கமாக ஊராட்சி பகுதியில் விடப்படும் போர்வெல் நீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வருடக்கணக்கில் விடப்பட்டு வருகிறது. இது அதிக குடியிருப்பு உள்ள தட்டான்குட்டை ஊராட்சி பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லாத நிலை ஏற்படுகிறது. ஒன்றிய பகுதிகளில் வாழும் விவசாய பெருமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு கூட போதுமான குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். பல கோடி  ரூபாய் மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அதன் நோக்கம்   நிறைவேறாமல், மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருக்கும் நிலை மாற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி