மத்தியபிரதேச மாநிலத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான நேற்று (ஏப்ரல் 14) அவர் பிறந்த கிராமத்தின் அருகே உள்ள சாங்க்வி என்ற கிராமத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மணமகன் குதிரையில் ஏறி வந்து போலீஸ் பாதுகாப்புடன் அங்குள்ள கோயிலில் வழிபாடு செய்துள்ளார். சாமி கும்பிட்ட பிறகு திருமணத்திற்கான ஊர்வலம் தொடங்கியது. எனினும், கோயிலில் மணமகன் நுழைய யாரும் எதிர்க்கவில்லை என போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர்.