நாகூர் திரொபதி அம்மன் ஆலய‌ 108 பால்குட ஊர்வலம்

85பார்த்தது
நாகூர் திரொபதி அம்மன் ஆலய‌ 108 பால்குட ஊர்வலத்தில் நடைபெற்ற சிலம்பாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரொபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் பங்குனி திருவிழா காப்புக் கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய சிலம்பாட்டத்துடன் பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பக்தி பரவசத்துடன் பால்குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி