சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வருட ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக் மோட்டார் வாகனம், டீசல் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், ஆட்டோ எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், பெயிண்டர் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதந்தோறும் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள தொழிற்பயிற்சி பள்ளியில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.