கேரளாவின்கோழிக்கோட்டில் மனைவியை கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்துள்ளது. தடுக்க வந்த மாமியார், மாமனாரையும் வெட்டி வீசியுள்ளார். ஆபத்தான நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோழிக்கோடு, தாமரச்சேரி, ஈங்கபுழா பகுதியில் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட ஷிபிலா என்ற பெண்ணுக்கும், யாசிர் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.