சாகர் காவச் கடலோர தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகை

73பார்த்தது
சாகர் காவச் எனும் கடலோர தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகை தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும்(செப்.4), நாளையும் இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் சாகர் காவச் எனும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு ஆண்டு தோறும் கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் காவல் துறையினர் இணைந்து கடலோரப் பகுதிகளில் சாகர் காவச் எனும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ஜோதி முத்துராமலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் படகுமூலம் கடலில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரே தீவிரவாதிகள் போல் ஊடுருபவர்களை தடுத்து நிறுத்தி கண்டறியும் பாதுகாப்பு ஒத்திகையே சாகர் காவச் ஆகும். கலங்கரை விளக்கங்களில் இன்றும், நாளையும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாகர் காவஜ் ஒத்திகை இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி