திருநாங்கூர் கோவிலில் யாகசாலை பூஜை

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று 5ஆம் காலையாக சாலை பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு வகையான வேதிகை பொருட்களை இட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி