சக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

72பார்த்தது
மயிலாடுதுறை நகர் பகுதியில் சக்தி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்ட குடமுழுக்கு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜையில் பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி