மயிலாடுதுறையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்வதற்கு கூட மிகுந்த அச்சம் அடைந்து வந்தனர். என் நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழையானது விவசாயத்திற்கு பயனுள்ள வகையில் அமையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.