மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் அருகே குமாரக்குடி கீழமாத்தூரில் உள்ள பாசன வாய்க்கால், கொண்டல் வாய்க்கால், ராஜன் கிடைத்தால் ஆகிய வாய்க்கால்களின் மூலம் சுமார் 10, 000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் வாய்க்கால்கள் கடந்த நான்கு வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.