இருவாச்சி என்பது சாகும் வரை தன்னுடைய இணையைப் பிரியாமல் வாழும் ஒரு பறவையினம் ஆகும். இதை ஆங்கிலத்தில் 'ஹார்ன்பில்' என அழைப்பர். இவை பறக்கும் பொழுது ஒரு வானூர்தி பறப்பது போல இருக்கும். வானூர்தி போல ஒலி எழுப்பும். பெரிய அலகை கொண்டவை. சுமார் 30-40 ஆண்டுகள் வாழக்கூடியவை. பெண் பறவை இறக்கை முழுவதையும் உதிர்த்து மெத்தை போல தளம் அமைத்து அதன் மேல் முட்டைகள் இடும். இந்தப் பறவை கேரளா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில அரசுகளின் மாநிலப் பறவை ஆகும்.