வெளிநாட்டிற்கு சென்று படிக்க மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பிய 11 நபர்களில் அண்ணாமலையும் ஒருவர். அதில் தமிழ்நாட்டில் இருந்து சேலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி ஐஏஎஸ் - ம் சென்றார். ரோகினி பற்றிய செய்தி வெளியே வரவே இல்லை. ஒவ்வொரு வருடமும் இதே போன்று பலர் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். பயிற்சிக்கு சென்ற மற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், பத்திரிகையாளர்கள் குறித்து எந்த செய்தியும் வெளிவரவில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.