கடலூர்: வேப்பூர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூரைச் சேர்ந்த அழகப்பன், நித்யா தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் வழக்கம்போல் நேற்றிரவு சண்டை ஏற்பட்டதால் மனமுடைந்த நித்யா, குழந்தைகளுடன் வீட்டின் அருகே உள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குழந்தைகள் உட்பட 3 பேரின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.