ஹரியான மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் கடும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. சிறுவன் ஒருவன் காரின் மேற்கூரையில் அமர்ந்துக்கொண்டு பயணிக்கும் வீடியோ தான் அது. போக்குவரத்து மிகுந்த பரபரப்பான அந்த சாலையில் சிறுவன் இவ்வாறு சாகசம் செய்தது, பாதுகாப்பு குறித்தும் போக்குவரத்து விதிகள் குறித்தும் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.