தனுஷ் சமீபத்தில் ரெஸ்டாரன் திறப்பு விழாவுக்காக லண்டன் சென்றுள்ளார். லண்டனில் தனுஷைப் பார்க்க தமிழ் மற்றும் பிற மொழி பேசுபவர்களும் என ஒரு பெரிய கூட்டம் திரண்டது. தன்னைப் பார்க்க கூடியிருந்த ரசிகரகளுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்தார் பின் ராயன் படத்தின் அடங்காத அசுரன் பாடலில் இருந்து உசுரே நீ தானே என்கிற வரியை அவர் பாடினார். அதை கேட்டதும் ரசிகர்கள் ஆர்பரித்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.