சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கொமதேக-வின் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளை (டிச. 09) நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சபையில் பேசவுள்ளனர். இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 39வது மாவட்டம் உதயமாகுமா என்பது குறித்து அரசு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.