பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் ஒரே நாடு பகுதியில் அமைந்துள்ள கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவர் பயன்பாட்டிற்கு பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.