மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையின் அருகே இருந்த புங்கன் மரம் திடீரென்று வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக ரயில்கள் செல்லாததாலும் பொதுமக்கள் அப்பகுதியில் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் உடனடியாக பணியாளர்களைக் கொண்டு விழுந்த மரமானது வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென மரம் சாய்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.