மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பலார் கோவில் பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் போலீசார் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதனை எடுத்து நேற்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பேனரை வைத்ததால் நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.