மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சியில் மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இறந்தவரின் உடலை வாய்க்கால் தண்ணீரில் இறங்கி சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வும் மேற்கொண்டார். தொடர்ந்து மயானம் செல்ல முறையான சாலை வசதியும், வாய்க்காலில் பாலம் அமைத்து தரும்படியும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.