இந்திர பெருவிழா தொடக்கம்

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரணேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரம் பாடல் பெற்ற காசிக்கு இணையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி இந்த ஆண்டு மாசி மாதம் இந்திரத் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு உற்சவ கொடியேற்றி மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி