மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.