குக்கர் வெடித்து விபத்து - முதியவர் படுகாயம்

73பார்த்தது
குக்கர் வெடித்து விபத்து - முதியவர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் குக்கர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக குக்கர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த முதியவர் படுகாயமடைந்தார். அவரது வாய் மற்றும் தாடை கிழிந்த நிலையில் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர்ந்து, குக்கர் வெடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி