தமிழகத்தில் 100 அரசு பள்ளிகளில், 'பசுமை பள்ளி' திட்டத்தை செயல்படுத்த ரூ.20 கோடி நிதியை அரசு விடுவித்துள்ளது. 2022-23-ல் முதற்கட்டமாக 25 பள்ளிகளில் இத்திட்டத்தை துவக்கினர். மேலும் 100 அரசு பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் 'சோலார் பேனல்' அமைத்து மின்வசதி பெறுதல், பள்ளி வளாகத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பழமரங்களை வளர்த்தல் உள்ளிட்டவை இத்திட்டத்தில் அடங்கும்.