தன் வீட்டுக்கு திருட வந்த திருடனால் கத்திக்குத்துக்கு ஆளான நடிகர் சைஃப் அலி கான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சைஃப் குணமடைந்து வருவதாகவும் அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளதோடு சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.