தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (22) என்பவர், அதிலாபாத் RIMS மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஆனார். இருவரும் நட்பாக பழகிவந்த நிலையில் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி சிவாவைச் சந்திக்க வந்த மாணவியை மயக்கிய இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்த நிலையில் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.