சால்மன், கெளுத்தி மீன்களில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். ஓட்ஸ், சிவப்பு அரிசி, குயினோவா போன்ற முழு தானியங்கள் விந்தணு உற்பத்திக்கு உதவும். பீன்ஸ், பருப்பு, சுண்டல் போன்ற பருப்புகள் விந்தணு தரத்தை உயர்த்தும். கோழிக்கறி, மாட்டிறைச்சி, முட்டையில் லீன் ப்ரோட்டீன் உள்ளது. தயிர், சீஸ், பால் உள்ளிட்ட பால் பொருட்கள் விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.