தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், மயிலாடுதுறையில் பெரிய கடைவீதியில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீத்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தீ பிடித்தால் அணைக்கும் கருவிகள் சரியாக உள்ளனவா எனவும் சோதனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.