திட்டச்சேரியில் பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது

3665பார்த்தது
திட்டச்சேரியில் பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஊராட்சி தேவன்குடி கீழத்தெரு பகுதி சேர்ந்தவர் நடேசன் மனைவி முருகவள்ளி (வயது 27). இவர் தனது குடும்பத்துடன் திட்டச்சேரி வடக்கு பட்டச்கால் தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நாகப்பட்டினம் வெளிப்பாளையம் தென்கரை தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் லெனின் (வயது 29). என்பவர் குடிபோதையில் முருகவள்ளியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவள்ளியை தலையில் தாக்கியுள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் லெனினை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் முருகவள்ளியை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகவள்ளி சிகிச்சை பெற்று வருகிறார். லெனினை கைது செய்த திட்டச்சேரி போலீசார் அவர் மீத வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி