திட்டச்சேரியில் போலீசார் அணிவகுப்பு

63பார்த்தது
திட்டச்சேரியில் போலீசார் அணிவகுப்பு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளி கிழமை) வாக்கு பதிவு நடக்கிறது. நாகை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திட்டச்சேரியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. திட்டச்சேரி ப. கொந்தகை சாலை சந்திப்பிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் திட்டச்சேரி மெயின்ரோடு வழியாக நடுக்கடை கடைத்தெரு வரை ஊர்வலம் நடந்தது. அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமை தாங்கினார். இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) லலித்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் அக்பர்அலி மற்றும் ஒடிசா மாநில ஆயுதப்படை போலீசார், நாகை மாவட்ட போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி