தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தைப் போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறினார். "எங்கே பயணம் செய்தாலும் அவர் ஒருவரால் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகிறோம். அது அற்புதமான உணர்வு, உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள். எந்த அழுத்தத்தையும் சேர்க்காதீர்கள் என தோனி எனக்கு அறிவுரை வழங்கினார். எளிமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஆதரவு கொடுப்பதாலேயே அவர் மகத்தானவராக போற்றப்படுகிறார்" என்றார்.