‘2ஆவது மனைவி வேண்டும்’ - LinkedIn-ல் பதிவு போட்ட நபரால் சர்ச்சை..

54பார்த்தது
‘2ஆவது மனைவி வேண்டும்’ - LinkedIn-ல் பதிவு போட்ட நபரால் சர்ச்சை..
ஜிதேந்திர சிங் என்பவர் தனது LinkedIn-ல் ப்ரொபைலில் இரண்டாவது மனைவிக்காக ஆட்சேர்ப்பு செய்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “3 சுற்றுகளாக நேர்காணல் நடைபெறும். சமையலில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். இரவில் எழுந்து பிரியாணி கேட்டால் சமைத்துத்தர வேண்டும். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பலரும் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி