கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தை கண்டித்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சியினர் அமித்ஷா பேச்சை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் கீழையூர் கடைத்தெரு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அதன் மாநில உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வி தொ ஒன்றிய செயலாளர் வீ. சுப்பிரமணியன்மற்றும் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஏ. ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா விற்கு எதிராகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்கருத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


இதில் சிபிஐ ஒன்றிய செயலாளர் எஸ். காந்தி ஒன்றிய துணைச் செயலாளர் வீ. எஸ். மாசேத்துங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி. சங்கர் , விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் எம்‌. பர்ணபாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி