மலை வளங்களை பாதுகாப்பது பற்றி கற்க வேண்டும் - அன்புமணி

64பார்த்தது
மலை வளங்களை பாதுகாப்பது பற்றி கற்க வேண்டும் - அன்புமணி
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மலை வளங்களை பாதுகாக்க வேண்டியது பற்றி பாடம் கற்க வேண்டும் என கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை நமக்கு கொடுத்த பெருங்கொடை. அதை பாதுகாக்கத் தவறியதால் தான் நிலச்சரிவு ஏற்படுகிறது. தமிழகத்திலும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி