பீகார் மாநிலம், தியோரியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாதுனிபால் (50). இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனையடுத்து அவரை கொலை செய்துவிட்டு நிலத்தை அபகரித்துக்கொண்டாக அவரது உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளனர். இந்நிலையில், ஜான்சியில் வீதி ஒன்றில் ஆதரவற்று திரிந்த ஒருவரை போலீசார் விசாரித்ததில் அவர் நாதுனிபால் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதனால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.