ரிசார்ட் ஜன்னலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

81பார்த்தது
ரிசார்ட் ஜன்னலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
ரிசார்ட் ஜன்னலில் இருந்து தவறி விழுந்த 10 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்காக கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு பெற்றோருடன் வந்த 10 வயது சிறுவன், ரிசார்ட்டின் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாகர் தலால், தனது மகன் பிரரம்ப் தலால் மற்றும் குடும்பத்துடன் சித்திரபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். சிறுவன் பிரரம்ப் தலால் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி