அரசியல் தரித்திரம் சீமான் என நாஞ்சில் சம்பத் காட்டமாக விமர்சித்துள்ளார். தந்தை பெரியார் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாஞ்சில் சம்பத், "எந்த தத்துவ பின்புலமும் இல்லாத அரசியல் தரித்திரம் சீமான். பெரியாரை வாசித்து விட்டு விமர்சனம் செய்தால் அதை கருத்தில் கொள்ளலாம். வாசிக்காமல் தான்தோன்றித் தனமாக உளறிக் கொட்டுவது சீமானின் இயல்பு" எனக் கடுமையாக சாடியுள்ளார்.