கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ராமநாதபுரம் போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு இரவில் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அனைவரும் நேற்று (ஜன., 07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.