நரிகள் அனைத்து கண்டங்களிலும் காணப்படக்கூடிய ஒரு விலங்கு. இது நாய்கள் இனத்தைச் சார்ந்தது. பொதுவாக நரிகள் தன் வாழ்நாள் முழுவதும் ஜோடியாகவே வாழும். உணவு கிடைக்காத நேரத்தில் தானே வேட்டையாடி உண்ணும். தனது வசிப்பிடத்தை ஏற்படுத்திக்கொள்ள நகங்களை கொண்டு பள்ளம் தோண்டி அதன் உள்ளே வாழும். ஆபத்து ஏற்பட்டால் இறந்தது போல நடித்து பின்னர் தப்பிக்கும் தந்திரம் கொண்டது. இதற்கு கூர்மையான கண் பார்வை மற்றும் செவித்திறன் உண்டு.