நாய் கடித்தவர்களுக்கு ரேபிஸ் நோய் பரவும் என்பதே நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாய் மட்டுமல்லாமல் பூனை, குரங்கு, பசு, எருமை, பன்றி, கீரி, நரி, ஓநாய், வெள்ளாடு, செம்மறியாடு, கரடி, கழுதை, குதிரை, ஒட்டகம், புள்ளிமான், அணில் போன்ற விலங்குகள் கடித்து ரேபிஸ் பரவியதற்கான ஆதாரங்கள் இந்தியாவில் உள்ளது. சுண்டெலி, முயல் போன்ற கொரிப்பான்கள், பறவைகள், வௌவால் போன்றவற்றில் ரேபிஸ் பரவுவதில்லை.