ஜார்கண்ட்: ராம்கார் மாவட்டம் மதுவாடண்ட் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஆட்டோ மீது, உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 3 பள்ளி குழந்தைகள், ஆட்டோ டிரைவர் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.