பிரதமர் மோடி வாய் கூசாமல் பொய் பேசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று (ஆக.5) செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியா, உணவு உற்பத்தியில் உபரி தேசமாக திகழ்கிறதாகவும், சர்வதேச அளவில் உணவு பாதுகாப்புக்குத் தீர்வு காண இந்தியா செயலாற்றி வருகிறது எனவும் பிரதமர் பேசியுள்ளார். இப்படி வாய் கூசாமல் பொய் பேசும் ஒரு பிரதமரை உலகம் கண்டிருக்காது.” என்றார்.