புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, புழல் சிறையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவருக்கு இன்று காலை திடீரென்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.