அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 19) ஆய்வு செய்தது ஒரு நாடகம் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து மேயர் பிரியா கூறுகையில், “ அம்மா உணவகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பாராட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.